பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஜீவிதா  படம் - இன்ஸ்டாகிராம்
செய்திகள்

சகோதரனின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய சீரியல் நடிகை!

சகோதரனின் பிறந்தநாளை சின்ன திரை நடிகை ஜீவிதா வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

DIN

சகோதரனின் பிறந்தநாளை சின்ன திரை நடிகை ஜீவிதா வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். இது குறித்த விடியோவையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

காதலனுக்கு பிறந்தநாள் கொண்டாடும் சக வயது நடிகைகளுக்கு மத்தியில் சகோதரனுக்கு பிரமாண்டமாக ஏற்பாடுகளைச் செய்து சகோதரனுக்காக ஜீவிதா பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரஞ்சனி தொடரில் நாயகியாக நடித்தவர் ஜீவிதா. இத்தொடரில் 4 ஆண் நண்பர்களுடன் பழகும் பெண்ணாக ரஞ்சனி என்ற பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

புது வசந்தம் பாணியில் ஆண் - பெண் நட்பை பெருமைப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட இந்தத் தொடர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடிய தைரியம் மிகுந்த பெண்ணாக ஜீவிதா நடித்திருந்தது, ரசிகர்கள் பலரைக் கவர்ந்தது.

நிஜ வாழ்க்கையிலும் வெளிப்படையான பெண்ணாக இருந்ததால், இந்த பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை ஜீவிதா வழங்கியிருந்தார். இவர் இதற்கு முன்பு சிங்கப் பெண்ணே தொடரில் ரெஜினா என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் துணைப் பாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், ரஞ்சனியில் நாயகியாகவே அசத்தியிருந்தார்.

ரஞ்சனி

கோவையைச் சேர்ந்த ஜீவிதா, ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது, அவ்வபோது போட்டோஷூட் செய்து புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். அவ்வாறு இவர் பதிவிட்ட புகைப்படங்களைப் பார்த்து இவருக்கு ரஞ்சனி தொடர் வாய்ப்பு கிடைத்தது.

நடிப்பு துறைக்கு வருவதற்கு வீட்டில் தனது சகோதரர் மிகுந்த உதவியாக இருந்ததால், சகோதரன் மீது அதீத பாசம் கொண்ட ஜீவிதா, அவருக்கு பிரமாண்டமாக பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விஜய் டிவி சீரியல்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எடையில்லா இடை... சிவாத்மிகா ராஜசேகர்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழை!

மோகன்லால் மகள் நாயகியாகும் படத்தின் அப்டேட்!

சிவப்பதிகாரம்... அஞ்சு குரியன்!

சென்னை, புறநகரில் இன்றிரவு முதல் மழை தீவிரமடையும்!

SCROLL FOR NEXT