வெளியானது மார்கன் படத்தின் முதல் 6 நிமிடங்கள்!
விஜய் ஆண்டனி நடித்துள்ள மார்கன் படத்தின் விடியோ குறித்து...
விஜய் ஆண்டனி நடித்த மார்கன் திரைப்படத்தின் முதல் 6 நிமிடங்கள் வெளியாகியுள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாகத் தனது 12-வது படமான ‘மார்கன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை விஜய் ஆண்டனியே சொந்தமாகத் தயாரித்து இசையமைத்துள்ளார்.
Advertisement
அட்டக்கத்தி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்துபோகும் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் எடிட்டரான லியோ ஜான் பால் இயக்கும் இந்தப் படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.
விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாகவும் பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இப்படம் ஜூன் 27 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, படத்தின் முதல் 6 நிமிடங்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் வெளியான டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் படத்தின் மீது ஆவலை ஏற்படுத்துகின்றன.
வித்தியாசமான கிரைம் திரில்லர் படமாக இப்படம் உருவாகியிருப்பதாகத் தெரிகிறது.