நூறு சாமி படத்தின் டீசர் தேதி!
நடிகர் விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் டீசர் குறித்து...
நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் சசி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான நூறு சாமி படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் டீசர் நாளை (ஏப்.4) வெளியாகுமென படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் இந்தத் தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
பிச்சைக்காரன் திரைப்படத்துக்குப் பிறகு சசி - விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும் ஸ்வாசிகா நாயகியாகவும் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப் படத்தின் ’மாயக் கனவோ’ என்ற முதல் பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, பாடகி சின்மயி மற்றும் பாடகர் கபில் கபிலன் இணைந்து பாடியது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்தது.
பாலாஜி ஸ்ரீராம் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் சுப்ரமணியம் சிவா நூறு சாமி திரைப்படம் குறைந்தது 4 தேசிய விருதுகளாவது கிடைக்கும் எனக் கூறியிருந்தார்.
Teaser Release Date for the Movie 'Nooru Saami'!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.