நடிகை த்ரிஷா.  படம்: எக்ஸ் / ஆர்கேஎஃப்ஐ
செய்திகள்

மன உளைச்சலில் இருந்தால் என்ன செய்வது? த்ரிஷா பகிர்ந்த ரீல்ஸ்!

நடிகை த்ரிஷா பகிர்ந்த இன்ஸ்டா ரீல்ஸ் குறித்து...

DIN

நடிகை த்ரிஷா பகிர்ந்த இன்ஸ்டா ரீல்ஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த ரீல்ஸ் ஏற்கெனவே டிரெண்டிங்கில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கடற்கரையில் ஒரு பெண் சாமியார் தோற்றத்தில் இருப்பவரிடம், “உங்களுக்கு மன உளைச்சலாக இருக்கும்போது என்ன செய்வீர்கள்?” எனக் கேள்வி கேட்பார்.

அதற்கு அந்தச் சாமியார் தாத்தா, “நான் மற்றவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவேன். ஏனெனில், சமநிலை முக்கியம்” எனக் கூறியிருப்பார்.

த்ரிஷா பகிர்ந்த ரீல்ஸ்.

இந்த விடியோ உண்மையானதா அல்லது ஏஐ உருவாக்கியதா எனத் தெரியவில்லை. ஆனால், இரண்டு நாள்களாக இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

இந்த ரீல்ஸைதான் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் பிறந்தநாளில் அவர் தனது நாய்க்குட்டியைக் கொஞ்சுவது போன்ற புகைப்படத்தை த்ரிஷா பதிவிட்டு இருந்தார். இது வைரலானது.

நடிகர் விஜய்யின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் சில விஷமிகள் த்ரிஷாவையும் இணைத்து பேசுவார்கள். அவர்கள் காதலிப்பதாகவும் பல ஆண்டுகளாக வதந்திகள் சுற்றுகின்றன.

அதனால், த்ரிஷா என்னப் பகிர்ந்தாலும் சர்ச்சையாகும். இருப்பினும், நடிகை த்ரிஷா அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தனக்கு தோன்றுவதை பதிவிட்டு வருகிறார்.

summary

Actress Trisha's Stress related Insta Reels are going viral on social media. It is also noteworthy that those reels are already trending.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபரேஷன் சிந்தூர்: 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு!

மத்திய பக்கிங்ஹாம் கால்வாயில் புனரமைக்கும் பணி! வெள்ளநீர் இனி விரைந்து செல்லும்!

சிறுமி பாலியல் வன்கொடுமை... பிரபல மலையாள நடிகை கைது!

ஜம்மு -காஷ்மீர் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலி!

அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற சலுகையா?

SCROLL FOR NEXT