நடிகர் கௌதம் ராம் கார்த்திக் 
செய்திகள்

காவல் துறை அதிகாரியாக நடிக்கும் கௌதம் ராம் கார்த்திக்?

நடிகர் கௌதம் ராம் கார்த்திக்கின் புதிய படம் குறித்து...

DIN

நடிகர் கௌதம் ராம் கார்த்திக், அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் என்பவரின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024-ம் ஆண்டு வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியான வெற்றியடைந்த “பேச்சி” திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான, வெர்சஸ் ப்ரொடெக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக், காவல் துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஞ்ஞானம் சார்ந்த க்ரைம் த்ரில்லர் கதைகளத்தைக் கொண்ட இந்தப் புதிய படத்தை, அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்குகிறார். இவர், நாளைய இயக்குநர் - 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின், படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கான நடிகர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தில், ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா, தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹம், இசையமைப்பாளர் விதுஷணன், வடிவமைப்பாளர் பாவ்னா கோவர்தன் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் மிராக்கல் மைக்கல் ஆகிய தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிரெண்டாகும் ஸ்குவிட் கேம் - 3..! நீங்கள் பார்த்துவிட்டீர்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT