ஆஸ்கர் விருதுடன் ஷான் பேகர்.  
செய்திகள்

5 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘அனோரா’ திரைப்படம்

அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

DIN

அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

2025ம் ஆண்டுக்கான 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. விருது விழாவை நகைச்சுவை நடிகர் கேனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார்.

இதில் சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குநர், நடிகை, திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை அனோரா திரைப்படம் குவித்துள்ளது.

இப்படத்திற்காக இயக்குநர் ஷான் பேகர் 4 ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். சிறந்த இயக்குநர், திரைக்கதை, படத்தொகுப்பு, சிறந்த படம் என ஷான் பேகர் 4 விருதுகளை வென்றார்.

4 விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்த ஷான் பேகர் 4 விருதுகளையும் வென்று அசத்தியுள்ளார்.

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: ஒருவர் கைது

இதன்மூலம் ஒரே படத்திற்காக 4 விருதுகளை வென்ற முதல் நபர் என்ற சாதனையை ஷான் பேகர் பெற்றுள்ளார்.

மேலும அனோரா படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை மைக்கி மேடிசனும், 'தி ஃப்ரூடலிஸ்ட்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஏட்ரியன் ப்ரோடியுன் வென்றனர்.

அதேசமயம் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட அனுஜா குறும்படத்துக்கு விருது கிடைக்கவில்லை. இந்தப் பிரிவில் I'M Not A Robot(ஐம் நாட் எ ரோபட்) என்ற குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வம்பிழுத்த திக்வேஷ் ரதி: சிக்ஸர் அடித்து நோட்புக் செலிபிரேஷன் செய்த நிதீஷ் ராணா!

முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜக்தீப் தன்கர் விண்ணப்பம்!

ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

SCROLL FOR NEXT