செய்திகள்

அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் படப்பிடிப்பு எப்போது?

அல்லு அர்ஜுன் - அட்லி படம் குறித்து...

DIN

இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணி இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார். 

ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க உள்ளதாகவும் நடிகர்கள் விஜய், ஷாருக்கானை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அட்லி கூறினார்.

ஜவான் படத்தைத் தொடர்ந்து அட்லி, நடிகர் சல்மான் கானை வைத்து புதிய படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், அதற்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் இயக்குநர் அட்லி படத்தில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

காரைக்குடி அருகே நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் 5,000 பனைவிதைகளை நடவு செய்ய திட்டம்

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்

வல்லத்தில் நவ. 8இல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT