நடிகை சோனாக்‌ஷி சின்ஹா படம்: இன்ஸ்டா / சோனாக்‌ஷி சின்ஹா
செய்திகள்

தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்‌ஷி சின்ஹா..! புதிய பட போஸ்டர்!

நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவின் புதிய பட போஸ்டர்...

DIN

நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவின் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் டபாங் படத்தின் மூலம் 2010-ல் நாயகியாக அறிமுகமானவர் சோனாக்‌ஷி சின்ஹா. தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். ஹிந்தியில் முக்கியமான சில படங்களில் நடித்துள்ளார்.

சில படங்கள் தோல்வியில் முடிந்தாலும் முன்னணி பாலிவுட் பஇயக்குநர்களின் தேர்வுப் பட்டியலில் இன்றும் இருக்கிறார்.

இறுதியாக, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஹீராமண்டி எனும் இணையத்தொடரில் வில்லியாக நடித்திருந்தார்.

இரு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜடதாரா எனும் தெலுங்குப் படத்தில் இணைந்துள்ளார். இதுதான் இவருக்கு முதல் தெலுங்கு படமாகும்.

மகளிர் நாளில் சோனாக்‌ஷியின் புகைப்படத்தைப் பதிவிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

சுதீர்பாபுவின் போஸ்டர்.

நாயகனாக சுதீர் பாபு நடிக்கிறார். வெங்கட் கல்யாண் இயக்கத்தில் சுதீர்பாபு, ப்ரீரானா அரோரா தயாரிப்பில் உருவாகும் இப்படம் பான் இந்திய படமாக தயாரிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வை போதும்... ஃபெளசி!

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

SCROLL FOR NEXT