நயன்தாரா பகிர்ந்த மூக்குத்தி அம்மன் 2 பட விடியோ!
நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்துள்ளார்.
நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முக்கியமான நடிகையாக இருக்கிறார் நயன்தாரா.
கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுமில்லாமல் சர்ச்சையிலும் சிக்கியது.
முக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
Advertisement
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்பாகத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சுந்தர் சி இயக்குகிறார்.
நடிகைகள் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களே இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் பூஜை ரூ. 1 கோடி செலவில் நடைபெற்றதாகவும் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய மொழிகளில் உருவாகவுள்ளதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்துள்ளார்.
தற்போது, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக், தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மண்ணாங்கட்டி, டெஸ்ட் (மார்ச்.4) ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.