9 மாத கடின உழைப்பு... கௌதம் ராம் கார்த்திக் பகிர்ந்த எடைக் குறைப்பு விடியோ!
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பகிர்ந்த எடைக் குறைப்பு விடியோ குறித்து...
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில் தனது உடல் எடைக் குறைப்பு விடியோவை பகிர்ந்துள்ளார். அதில் தனது 9 மாத கடின உழைப்பு எனக் குறிப்பிட்டு நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக் சமீபத்தில் தனது பெயரை கௌதம் ராம் கார்த்திக் என மாற்றினார்.
பெரிதாக ஹிட் அடிக்காமல் இருந்த கௌதம் ராம் கார்த்திக் படங்கள் சமீபத்தில் கவனம் பெற்று வருகின்றன. கடைசியாக பத்து தல படத்தில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது.
Advertisement
Advertisement
தற்போது எஃப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய மனு ஆனந்த் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஆர்யா, மஞ்சு வாரியர், கொளதம் கார்த்திக், அனகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் வரும் ஏப்.17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில், கௌதம் ராம் கார்த்திக் 96 கிலோ எடையில் இருந்து உடல் எடையைக் குறைத்துள்ளார். அவர் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
9 மாதங்களின் ரத்தம், வியர்வை, அழுகை, எல்லைகளை மீறுதல், பசியை அடக்குதல், தொடர்ச்சியாக உழைத்தல், பழைய காயத்தில் இருந்து மீளுதல். எனது பயிற்சியாளர் தினேஷ் உதவியுடன் மிஸ்டர் எக்ஸ் படத்துக்குத் தயாரானேன்.
என்னுடைய வாழ்க்கையில் இது மிகப்பெரிய மாற்றம். இந்தக் கதாபாத்திரத்தில் என்னை நம்பியதற்கு எனது இயக்குநர் மற்றும் எனது நண்பர் மனு ஆனந்துக்கு எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.
9 months of blood, sweat and tears Gautham Ram Karthik transformation video.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.