செய்திகள்

என் கணவர் படத்திற்கு மட்டும் மோசமான விமர்சனங்கள்: ஜோதிகா ஆதங்கம்!

கங்குவா குறித்து ஜோதிகா பேசியுள்ளார்...

DIN

கங்குவா திரைப்படத்திற்கு மட்டும் மிக மோசமான விமர்சனங்கள் கிடைத்துள்ளதாக ஜோதிகா ஆதங்கப்பட்டுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி மிக மோசமான விமர்சனத்திற்குள்ளான திரைப்படம் கங்குவா. இயக்குநர் சிவா இயக்கிய இப்படம் இந்தியளவில் மிகப்பெரிய வணிகப்படமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தொழில்நுட்ப ரீதியாக பலமான படமாக இருந்தாலும் கதை மற்றும் கதாபாத்திரங்களின் வலுவற்ற தன்மையால் படம் நினைத்து பார்க்காத அளவிற்கு எதிர்வினைகளைச் சந்தித்தது.

முக்கியமாக, படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா கங்குவா ரூ. 2000 கோடி வசூலிக்கும் என நகைச்சுவையாகக் கூறியதெல்லாம் விமர்சனங்களாக மாறியதால் இப்படம் படுதோல்வியையே அடைந்தது.

படம் வெளியானபோதே ஏன் இவ்வளவு மோசமாக விமர்சிக்கிறீர்கள் என நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதியாக பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், கங்குவா படம் குறித்து தன் கருத்துக்களைத் தெரிவித்தவர், அது ஏன் நல்ல படம் என்றும் எழுதியிருந்தார். இது பலராலும் பகிரப்பட்டது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோதிகாவிடம் கங்குவா குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எவ்வளவோ மோசமான படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றதைப் பார்த்திருக்கிறேன். விமர்சகர்கள் அவற்றையெல்லாம் பலமாகத் தாக்கவில்லை. ஆனால், என் கணவர் நடித்த படத்திற்கு மட்டும் இவ்வளவு மோசமான விமர்சனங்கள் கிடைத்தது சரியானது இல்லை.

தகுதியற்ற படங்களைவிட கங்குவா பெற்ற விமர்சனங்கள் என்னை பாதித்தது. மேலும், இந்த விஷயத்தில் ஊடகங்கள் பாரபட்சமாக நடந்துகொண்டது மிக அவமானகரமானது” எனக் கடுமையாகப் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபார்முக்கு திரும்பிய பிரேசில்..! அணியில் இடம்பெறாத நெய்மர் கூறியது என்ன?

ராம் அப்துல்லா ஆண்டனி டிரைலர்!

ராகுல் காந்தி நோபல் பரிசுக்கு தகுதியானவர்; ஜனநாயகத்தைக் காக்க போராடுகிறார்! - காங்கிரஸ்

மின்னுவதெல்லாம் பொன்தான்... கங்கனா ரணாவத்!

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: நடிகர் மாதவன்

SCROLL FOR NEXT