தி காஷ்மீர் ஃபைல்ஸ் போஸ்டர். படம்: எக்ஸ் / அபிஷேக் ஆர்ட்ஸ் அகர்வால்.
செய்திகள்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சையைத் தொடர்ந்து தி தில்லி ஃபைல்ஸ்!

தி தில்லி ஃபைல்ஸ் என்ற புதிய திரைப்படம் குறித்து...

DIN

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் ’தி தில்லி ஃபைல்ஸ்’ என்ற படத்தினையும் தயாரித்துள்ளது.

காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து எடுக்கப்பட்ட தி காஷ்மீா் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி மிகுந்த சர்ச்சைய ஏற்படுத்தியது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் போஸ்டர்.

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய இந்தப் படம் சர்ச்சை மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு ரூ.340 கோடி வசூலித்தது.

அனுபம் கொ், தா்ஷன் குமாா், மிதுன் சக்கரவா்த்தி, பல்லவி ஜோஷி நடித்திருந்தனர்.

இந்நிலையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெளியாகி 3ஆண்டு ஆனதையொட்டி தி தில்லி ஃபைல்ஸ் குறித்து அப்டேட் கூறியுள்ளார்கள்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு கிடைத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. தற்போது புதிய உண்மையுடன் திரைக்கு வரவிருக்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

தி தில்லி ஃபைல்ஸ் படம் ஆக.25ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தையும் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தி தில்லி ஃபைல்ஸ் போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக அவரது தந்தையின் சிலை மட்டும்தான்: அண்ணாமலை விமர்சனம்

சென்னை, புறநகரில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

உள்நாட்டில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்! 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி!

மாலை மங்கும் நேரம்... மௌனி ராய்!

உலக தடகள சாம்பியன்ஸிப்: ஒலிம்பியன்கள் நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் ஏமாற்றம்!

SCROLL FOR NEXT