டெஸ்ட் - சித்தார்த் அறிமுக விடியோ!
டெஸ்ட் படத்தின் அறிமுக விடியோ வெளியானது...
நடிகர் சித்தார்த்திற்கான டெஸ்ட் திரைப்படத்தின் அறிமுக விடியோவை வெளியிட்டுள்ளனர்.
மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும் மாதவன் மற்றும் நயன்தாரா பிரதான பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கௌதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி?
இப்படம் வருகிற ஏப். 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்த நிலையில், டெஸ்ட் படத்தில் அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த சித்தார்த்தின் அறிமுக விடியோவை வெளியிட்டுள்ளனர்.
இதில், சித்தார்த் இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கட்டாய ஓய்வு பெற நிர்பந்திக்கப்படும் வீரராகக் காட்டப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.