ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்  கோப்புப் படம்
செய்திகள்

ஹிந்தியை எதிர்க்கும் தமிழர்கள் ஏன் தமிழ்ப்படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்கிறீர்கள்: பவன் கல்யாண்

தமிழ்ப் படங்களை ஹிந்தியின் ஏன் டப்பிங் செய்கிறீர்கள் என பவன் கல்யாண் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

DIN

நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தமிழ்ப் படங்களை ஹிந்தியின் ஏன் டப்பிங் செய்கிறீர்கள் என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழர்களை சீண்டும் விதமாக ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தமிழ்ப் படங்களை ஏன் ஹிந்தியில் டப்பிங் செய்கிறீர்கள்?

பவன் கல்யாண் பேசியதாவது:

ஹிந்தியை தென்னிந்தியாவில் திணிக்கிறார்கள் என்கிறார்கள். எல்லாம் தேசிய மொழிதானே. தமிழ்நாட்டில் ஹிந்தி வரக்கூடாது என்கிறார்கள். அப்போது எனக்கு தோன்றியது என்னவென்றால் ஹிந்தி மட்டும் வேண்டாம் என்கிறார்கள் பிறகு ஏன் தமிழ்ப் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்கிறீர்கள்?

பணம் மட்டும் ஹிந்தியில் இருந்து வேண்டும். உ.பி., பிகார், சத்தீஸ்கரிலிருந்து பணம் வேண்டும். ஆனால், ஹிந்தி மட்டும் வேண்டாம் என்றால் அது எப்படி நியாயமாகும்?

பணியாற்ற மட்டும் பிகாரிலிருந்து ஆள் வரவேண்டும் ஆனால் ஹிந்தியை வேண்டாம் என்றால் எப்படி? இதெல்லாம் மாறவேண்டுமல்லவா? மொழிகளில் மீது ஏன் வெறுப்பு காட்ட வேண்டும் எனப் பேசியுள்ளார்.

பவன் கல்யாண் தற்போது ஹரஹரவீரமல்லு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக நடிகர் கார்த்தியை லட்டு விவாகரத்தில் மன்னிப்பு கேட்கவைத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆந்திரத்தில் முக்கியமான நடிகராக இருக்கும் பவன் கல்யாண் தனது ஜன சேனா கட்சியை 2014இல் துவக்கினார். தற்போது ஆந்திரத்தின் துணை முதல்வராக உயர்ந்துள்ளார்.

பவன் கல்யாண் நடிப்பில் 3 படங்கள் (ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங், ஓஜி) வெளியாகாமல் தாமதிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஹரி ஹர வீர மல்லு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.

கிறிஸ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கும் ஹர ஹர வீரமல்லு படத்தின் அப்டேடினை தயாரிப்பாளர் மெகா சூர்யா புரடக்‌ஷன்ஸ் சமீபத்தில் வெளியிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT