சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை கோமதி பிரியாவை எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம் பாராட்டிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் சிறகடிக்க ஆசை. இத்தொடரின் நாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. இவருக்கு ஜோடியாக நடிகர் வெற்றிவசந்த் நடிக்கிறார். இத்தொடரை திருமதி செல்வம் தொடரை இயக்கிய குமரன் இயக்குகிறார்.
இதேபோன்று சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரை இயக்குநர் திருமுருகன் இயக்கி வருகிறார். எதிர்நீச்சல் தொடரும் சிறகடிக்க ஆசை தொடரும் டிஆர்பி பட்டியலில் போட்டிபோட்டுக்கொண்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதனிடையே விருது நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கோமதி பிரியாவுக்கு இயக்குநர் திருச்செல்வம் விருது வழங்கி பாராட்டினார். விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய நடிகை கோமதி பிரியா,
திருச்செல்வம் சாரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் தன்னைப் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சிகரமானது எனவும் குறிப்பிட்டார்.
aமதுரையில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்து இப்போது விஜய் டிவியில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, தற்போது கதாநாயகியாகவும் மாறியிருப்பதாகவும்,
தனக்கு பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல்தான் எனவும் நெகிழ்ச்சி அடைந்தார்.
இப்போது திருச்செல்வம் சார் தனது நடிப்பைப் பாராட்டியுள்ளதாகவும், அவருடைய பாராட்டே பெரிய விருது கிடைத்தது போல உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
விருது கொடுக்கும்போது பேசிய திருச்செல்வம், மதுரையில் பிறந்து வளர்ந்த இவரை நான் எப்படி மிஸ் செய்தேன் என்றே தெரியவில்லை. இவரை என் தொடரில் நடிக்க வைத்திருப்பேன் எனக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரின் கதைகளம் மதுரையில் இருக்கும் குணசேகரன் குடும்பத்தை சுற்றிதான் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மதுரையை சொந்த ஊராகக் கொண்ட கோமதி பிரியாவை நடிக்க வைக்க முடியவில்லை என்று இயக்குனர் திருசெல்வம் வருந்தியதை கோமதி பிரியாவின் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க | 46 வயதில் தாயாகவுள்ளதை அறிவித்த சின்ன திரை நடிகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.