செய்திகள்

1000 திரைகளில் குட் பேட் அக்லி!

குட் பேட் அக்லி திரை எண்ணிக்கை குறித்து...

DIN

குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் 1000 திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக இன்னும் 24 நாள்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

படத்தின் டீசர் வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்றதால் உறுதியாக இப்படம் ஹிட் அடிக்கும் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

முக்கியமாக, படத்தின் முதல் பாடலான ’ஓஜி சம்பவம்’ நாளை (மார்ச். 18) வெளியாகவுள்ளது. இந்த நிலையில், குட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் 1000 திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், படத்தின் தயாரிப்பாளரான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஹிந்தியிலும் இப்படத்தை அதிக திரைகளில் வெளியிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 8-இல் நெடுந்தூர ஓட்டப் போட்டி: பங்கேற்க அழைப்பு

எஸ்.ஐ.ஆா் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகம் தொடங்கியது

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியவா் கைது

சமூக சீரழிவே கோவை சம்பவத்துக்கு காரணம்: ஈ.ஆா். ஈஸ்வரன்

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் இல்லாமல் எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகம்:எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT