எதிர்நீச்சல் நாயகிகள் இன்ஸ்டாகிராம்
செய்திகள்

எதிர்நீச்சல் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்த 4 நடிகர்கள்!

எதிர்நீச்சல் முதல் பாகத்தில் இருந்த நான்கு பாத்திரங்கள் இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றன.

DIN

எதிர்நீச்சல் முதல் பாகத்தில் இருந்த நான்கு பாத்திரங்கள் இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றன.

சமீபத்தில் அந்த நான்கு பாத்திரங்களும் தோன்றிய காட்சிகள் ஒளிபரப்பான நிலையில், அக்காட்சிகள் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் - 2 தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவந்தாலும் டிஆர்பி புள்ளிகளில் சற்று பின்தங்கியே உள்ளது. எதிர்நீச்சல் முதல் பாகம் ஒளிபரப்பான காலகட்டத்தில் தொடர்ந்து முதலிடத்திலேயே நீடித்து வந்ததால், அதனை ஒப்பிடும்போது சற்று குறைவாகவே எதிர்நீச்சல் -2 தொடருக்கான வரவேற்பு உள்ளது.

எனினும் இயக்குநர் திருச்செல்வத்திற்காகவும், முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் நான்கு பெண்களுக்காகவும் எதிர்நீச்சல் தொடரை விடாமல் பார்த்துவரும் ரசிகர்கள் ஏராளம்.

நாயகி மதுமிதாவை தவிர எதிர்நீச்சல் முதல் பாகத்தில் இருந்த நடிகர்களே இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்து வருகின்றனர். மதுமிதாவுக்கு பதிலாக புதுப் புது அர்த்தங்கள் தொடரின் நாயகி பார்வதி நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் முதல் பாகத்தில் இருந்த நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் தோன்றும்போது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பும் உற்சாகமும் உள்ளதை சமூக வலைதளங்கள் வாயிலாக பார்க்கமுடிகிறது.

அந்தவகையில் சமீபத்தில் எதிர்நீச்சல் 2 தொடரில் தோன்றிய கெளதம், கொற்றவை, வசு, பெண் காவல் அதிகாரி என நான்கு பாத்திரங்கள் சமீபத்தில் தோன்றின. அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

மீண்டும் தோன்றிய 4 கதாபாத்திரங்கள்

இந்தக் காட்சிகளை ரசிகர்கள் பலர் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எதிர்நீச்சல் -2 தொடரில் சிறிய பாத்திரங்களில் தோன்றுபவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்பதே ரசிகர்களின் இத்தகைய செயல்கள் உணர்த்துகின்றன.

இதையும் படிக்க | சிவாங்கி உடன் இணையும் சின்ன திரை பிரபலம்!

இதையும் படிக்க | குறுகிய காலத்தில் நிறைவடையும் தொடர்! காரணம் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு செய்திகள்:சில வரிகளில் 2.8.25

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

SCROLL FOR NEXT