நடிகர் மோகன்லால் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படமென்பதால் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: எம்புரான் டிரைலர் தேதி!
இந்த நிலையில், நேற்று (மார்ச் 18) நடிகர் மோகன்லால் இருமுடி கட்டி சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்துள்ளார். இதற்காக, பம்பையிலிருந்து நடந்தே சன்னிதானம் சென்ற மோகன்லால், நடிகர் மம்மூட்டியின் இயற்பெயரான முகமது குட்டி பெயருக்கு அர்ச்சனையும் செய்ததாகக் கூறப்படுகிறது.
மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிகர்களான இருவரும் நெருங்கிய நட்பிலிருப்பது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், நடிகர் மம்மூட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், வதந்திதான் என மம்மூட்டி தரப்பில் விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தன் கல்லறை குறித்து ஒளரங்கசீப் என்ன சொன்னார் தெரியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.