நடிகர் இர்ஃபான். 
செய்திகள்

சின்ன திரையில் மீண்டும் இர்ஃபான்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

இர்ஃபானின் புதிய தொடர் தொடர்பாக...

DIN

நடிகர் இர்ஃபான் சின்ன திரையில் புதிய தொடரொன்றில் நடிக்கவுள்ளார்.

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட இர்ஃபான், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார். இத்தொடரில் வினீத் பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இத்தொடரின் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, தன்னுடைய நடனத் திறமையை வெளிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து, இவருக்கு பெரிய திரையில் வாய்ப்புக் கிடைத்தது. மெர்குரி பூக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பட்டாளம், எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம், ரூ, ராஜாவுக்கு செக் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதனிடையே, சரவணன் மீனாட்சி தொடரில் இர்ஃபான் குறுகிய காலம் மட்டுமே நடித்திருந்தாலும் இத்தொடர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இத்தொடரில் சரவணனாக நடித்து ஏராளமான ரசிர்களைப் பெற்றார்.

இவர் சில குறும்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாநடிகை நிகழ்ச்சியில், போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

இதையும் படிக்க: எதிர்நீச்சல் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்த 4 நடிகர்கள்!

இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் இர்ஃபான் இணைந்துள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய தொடரின் முன்னோட்டக் காட்சி, ஒளிபரப்பு தேதி போன்ற அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மீண்டும் சின்ன திரையில் இர்ஃபான் நடிக்கவுள்ளது, அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

SCROLL FOR NEXT