சூர்யா, த்ரிஷா.  கோப்புப் படம்.
செய்திகள்

சூர்யா 45: 500 நடனக் கலைஞர்களுடன் குத்துப் பாடல்!

சூர்யா 45 படத்தில் 500 நடன கலைஞர்களுடன் குத்துப் பாடலை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சூர்யா 45 படத்தில் 500 நடன கலைஞர்களுடல் குத்துப் பாடல் ஒன்று படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த வாரம் ஈசிஆரில் 500 நடன கலைஞர்களுடல் குத்து பாடல் ஒன்று படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் சூர்யாவுடன் த்ரிஷா நடனமாடவிருக்கிறாராம். இதற்காக சில கோடிகள் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தை இயக்குவதுடன் ஆர். ஜே. பாலாஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகத் தெரிகிறது.

கோட் படத்தில் மட்ட எனும் பாடலில் த்ரிஷா நடனம் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT