செய்திகள்

தனுஷ் - அஜித் கூட்டணி! தயாரிப்பாளர் சொன்னது என்ன?

தனுஷ் - அஜித் கூட்டணி குறித்து...

DIN

நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்கும் முயற்சியில் நடிகர் தனுஷ் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் அரிதாகவே உச்ச நட்சத்திரங்களின் கூட்டணி இணைகிறது. பெரும்பாலும் ஒரே படத்தில் சம அளவுள்ள கதாபாத்திரங்களில் நடிப்பார்கள்; இல்லையென்றால் சிறப்புத் தோற்றத்தில் நட்புக்காக வந்து செல்வார்கள்.

தற்போது, சினிமா வட்டாரத்தில் புதிய தகவல் ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறது. நடிகர் அஜித்திடம் நடிகர் தனுஷ் கதை ஒன்றை சொன்னதாகவும் அது அஜித்துக்குப் பிடித்துபோக மேற்கொண்டு கதையை விரிவாக்கம் செய்யும் பணியில் தனுஷ் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

சில ஆண்டுகளாகவே நடிப்பதைவிடவும் தனுஷுக்கு படத்தை இயக்குவதிலும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை என கடந்த 2 ஆண்டுகளில் 3 படங்களை அடுத்தடுத்து இயக்கி ஆச்சரியப்படுத்தினார்.

இந்த நிலையில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் நேர்காணல் ஒன்றில் பேசியபோது, “எங்கள் தயாரிப்பில் நடிகர் தனுஷ் அடுத்ததாக லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து தனுஷ் மீண்டும் படம் இயக்கும் திட்டத்தில் இருக்கிறார். நடிகர் அஜித் குமாரிடம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், தனுஷ் நடிகர் அஜித்திடம் கதை சொல்லியிருக்க வாய்ப்பு அதிகம் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT