சனத் ஜெயசூர்யாவை சந்தித்த ரவி மோகன் 
செய்திகள்

கிரிக்கெட்டர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் இலங்கை படப்பிடிப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரரைச் சந்தித்தார்.

DIN

நடிகர் ரவி மோகன் இலங்கை படப்பிடிப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரரைச் சந்தித்தார்.

இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கை தலைநகர் கொழும்புவில் துவங்கியுள்ளது.

பராசக்தி படத்துக்குகாக நடிகர்கள் ரவி மோகன் (ஜெயம் ரவி), சிவகார்த்திகேயன் உள்பட படக்குழு இலங்கை சென்றுள்ளது.

பராசக்தியை 2026 பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் என அதன் தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான சனத் ஜெயசூர்யாவை ரவி மோகன் சந்தித்து பேசியுள்ளார்.

இருவரும் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

சனத் ஜெயசூர்யா ஒருநாள் போட்டிகளில் 13, 430 ரன்கள் எடுத்து ஒரு தலைசிறந்த பேட்டராக கருதப்படுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT