இதயம் - 2 தொடரில் சிறப்புத் தோற்றத்தில் வீரா நாயகன்!
இதயம் - 2 தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் அருண் நடித்துள்ளார். இவர் வீரா தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.
இதயம் - 2 தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் அருண் நடித்துள்ளார். இவர் வீரா தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.
வீரா தொடரில் இவரின் வசீகரமான தோற்றத்துக்கும் நடிப்புக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தற்போது இதயம் - 2 தொடரை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் அருண் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இத்தொடரில் அருண் இடம்பெற்ற காட்சிகள் அவரின் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
ஜனனி அசோக் குமார் - ரிச்சர்ட் ஜோஷ் இணைந்து நடித்த இதயம் தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து , தற்போது இதயம் - 2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் ஜனனி அசோக் குமாருக்கு பதிலாக, தெலுங்கு தொடர் நடிகை பல்லவி கெளடா நாயகியாக நடிக்கிறார். முதல் பாகத்தில் ஒரு குழந்தை இருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் இரு குழந்தைகளை வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிற்பகல் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக வரவேற்பைப் பெற்ற தொடராக இதயம் இருந்தது. தற்போது இதயம் - 2 தொடரும் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இதையும் படிக்க |இதயம் - 2 தொடரின் நாயகி யார் தெரியுமா?
இதையும் படிக்க | எதிர்நீச்சல் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்த 4 நடிகர்கள்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.