விஜய்யிடம் வாழ்த்து பெற்ற டிராகன் படக்குழு. 
செய்திகள்

விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற டிராகன் படக்குழு!

விஜய்யிடம் வாழ்த்து பெற்ற டிராகன் படக்குழு.

DIN

நடிகரும் அரசியல் தலைவருமான விஜய்யை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்ட டிராகன் படக்குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் இன்றையகால இளைஞர்களுக்கு ஏற்றப்படி கதையும் காட்சிகளும் இருந்ததால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படம் இதுவரை ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

இதனிடையே, இப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தன் வீட்டிற்கே அஸ்வத்தை அழைத்துப் பாராட்டினார்.

இந்த நிலையில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, நடிகர் பிரதீப் ரங்கநாதன், தயாரிப்பாளர்கள் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் ஆகியோர் இன்று(மார்ச் 24) விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

இது குறித்து அஷ்வத் மாரிமுத்து தன்னுடைய சமூக வலைதளப் பதிவில், ”என்னை சார்ந்தவர்களுக்கு தெரியும் நடிகர் விஜய்யை ஒருநாள் முழு தகுதியுடன் சந்திக்கவும் அவருடன் பணியாற்றவும் எவ்வளவு கடுமையாக உழைத்து வருகிறேன் என்று. ”

அவருடைய மிகப் பெரிய ரசிகன் என்று என் குழுவினருக்கு தெரியும். நான் என்ன பேசப்போகிறேன் என்று என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள். அவர் என்னை பார்த்தார்.

கண்ணீர் மட்டும் வந்தது. அனைவருக்கும் ஆச்சரியம், ஏன் அவர் மீது இவ்வளவு அன்பு என்று. என் நண்பன் பிரதீப் ரங்கநாதனுக்காக படம் எடுக்க வந்தேன். அவர் கூறிய ‘அருமையாக எழுதி இருக்கிறீர்கள் சகோதரரே’ என்ற வார்த்தையில் என்னுடைய வட்டம் நிறைவடைந்தது. இது போதும் எனக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

SCROLL FOR NEXT