விஜய் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவரும் சிறகடிக்க ஆசை தொடருக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சின்ன திரையில் அதிக டிஆர்பி பெறும் தொடர்களின் பட்டியலில் சிறகடிக்க ஆசை தொடரும் உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக டிஆர்பி பெறும் தொடர்களில் முதன்மை இடத்தில் இத்தொடர் உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களைக் கவர்ந்த தொடராக சிறகடிக்க ஆசை தொடர் மாறியுள்ளது.
கார், பங்களா என செல்வந்த குடும்பத்தின் பிரச்னைகளை கதைக்களமாக வைத்து பெரும்பாலான தொடர்கள் ஒளிபரப்பாகிவரும் நிலையில், நடுத்தரக் குடும்பத்தின் பிரச்னைகளை பேசும் தொடராக சிறகடிக்க ஆசை உள்ளது.
இத்தொடரின் நாயகன் டாக்ஸி ஓட்டுநர். கோயில் தெருவில் பூக்கடை வைத்திருப்பவர் நாயகி. இருவரின் குடும்பமும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவை.
இவர்கள் திருமணம் செய்துகொண்டு குடும்ப சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கின்றனர். அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் சவால்களுமே சிறகடிக்க ஆசை தொடரின் கதைக்களம்.
இதனால், பலதரப்பட்ட ரசிகர்களால் இந்தத் தொடரின் காட்சிகளை தொடர்புப்படுத்திக்கொள்ள முடிவதால், தொடர்ந்து மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் தொடராக இது உள்ளது.
இத்தொடரை இயக்குநர் குமரன் இயக்குகிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திருமதி செல்வம் தொடரை இயக்கியவர் இவரே. இத்தொடருக்கு குரு சம்பத்குமார் கதை எழுதுகிறார்.
கதையின் நாயகனாக வெற்றி வசந்த் (முத்து) நாயகியாக கோமதி பிரியா (மீனா) நடிக்கின்றனர்.
இதனிடையே சிறகடிக்க ஆசை தொடர் குறித்து பேட்டி ஒன்றில் கதாசிரியர் குரு சம்பத்குமார் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில், இத்தொடருக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் குறித்து தெரிவித்துள்ளார். இத்தொடருக்கு சின்ன சின்ன ஆசை என முதலில் பெயர் வைத்ததாகவும், ஆனால் நடிகர்கள் தேர்வு, படப்பிடிப்பு தளத் தேர்வு என நாள்கள் சென்றுகொண்டிருக்க சிறகடிக்க ஆசை என பெயர் மாறியதாகவும் குறிப்பிட்டார்.
மெரினா கடற்கரையில் தள்ளுவண்டிக் கடையில் வியாபாரம் செய்து குடும்பம் நடத்திவரும் பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து சிறகடிக்க ஆசை தொடரின் கதையை அமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கதாசிரியரின் இந்தத் தகவல் சிறகடிக்க ஆசை தொடரின் மீதான மரியாதையையும், எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | திருமண பந்தத்தில் இணைந்த சுந்தரி தொடர் நடிகர்!
இதையும் படிக்க | 800 நாள்களை நிறைவு செய்த ஆனந்த ராகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.