செய்திகள்

வீர தீர சூரன் வசூல் எவ்வளவு?

வீர தீர சூரன் வசூல் குறித்து...

DIN

வீர தீர சூரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் - அருண் குமார் கூட்டணியில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் வியாழக்கிழமை மாலைக் காட்சியாகத் தாமதமாக வெளியானது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹெச்ஆர் பிக்சர்ஸ் பி4யூ (B4U) என்ற நிறுவனத்திடம் ஓடிடி உரிமத்தைக் கொடுத்துள்ளனர்.

ஆனால், ஓடிடி தேதியை உறுதிசெய்யாமல் இருந்ததால் பி4யூ நிறுவனம் வீர தீர சூரன் படத்தின் வெளியீட்டை நிறுத்த மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கு விசாரிப்பில் சில நிபந்தனைகளுக்குப் பின் படம் வெளியானது.

திட்டமிட்ட நாளில் தாமதமாகத் திரைக்கு வந்தாலும் முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமான வீர தீர சூரன் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால், இப்படத்திற்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை இப்படம் இந்தியளவில் ரூ. 8.5 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெறும் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

ஜெய்லர்- 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடியும்: நடிகர் ரஜினி தகவல்

SCROLL FOR NEXT