செய்திகள்

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியில் புதிய படம்!

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் படம் குறித்து...

DIN

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.

தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இதனிடையே, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள அவரது 51-வது படமான ஏஸ் (Ace) கோடை வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். பான் இந்திய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.

இதனை பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கின்றனர். ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

SCROLL FOR NEXT