ஹிட் 3 போஸ்டர் 
செய்திகள்

ரூ.100 கோடியை நெருங்கும் ஹிட் 3!

நானி நடிப்பில் வெளியான ஹிட் 3 திரைப்படம் வசூலில் கலக்கி வருகிறது.

DIN

நானி நடிப்பில் வெளியான ஹிட் 3 திரைப்படம் வசூலில் கலக்கி வருகிறது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானியின் நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிப் படமானது.

சைலேஜ் கொலனு இயக்கத்தில் நானி நடித்த ஹிட் - 3 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

வால் போஸ்டர் சினிமா, அனானிமஸ் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் மே.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். ஹிட் படத்தின் முதலிரண்டு பாகங்கள் அபார வெற்றி பெற்றன.

ஹிட் 3 படத்துக்கு ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் வன்முறை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் இருக்கின்றன.

முதல்நாளில் ஹிட் 3 படம் ரூ. 43 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. நானி படங்களில் அதிகபட்ச முதல்நாள் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 3 நாளில் ரூ.82 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய நாளின் முடிவில் ரூ.100 கோடியை எட்டுமென கணிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT