செய்திகள்

9 மாதங்களில் நிறைவடையும் பிரபல தொடர்!

புன்னகைப் பூவே தொடர் நிறைவடையவுள்ளது தொடர்பாக...

DIN

புன்னகைப் பூவே தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் புன்னகைப் பூவே. இத்தொடரில் பிரதான பாத்திரத்தில் ஹர்ஷ் நாக்பால், ஐஷ்வர்யா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

முன்னதாக, இத்தொடரில் இருந்து கலைவாணி பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சைத்ரா சக்காரி விலகிய நிலையில், தற்போது ஐஷ்வர்யா ஆகியோர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், புன்னகைப் பூவே தொடரின் டிஆர்பி புள்ளிகள் குறைந்து வருவதால் இத்தொடரை முடிக்க தொடர் குழு முடிவெடுத்துள்ளது. இதனால், இத்தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கப்பட்ட புன்னகைப் பூவே தொடர் 9 மாதங்களே ஆன நிலையில் நிறைவடையவுள்ளது இத்தொடர் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நேரத்தில் நடிகர் கிருஷ்ணா நடிக்கும் புதிய தொடரான வினோதினி தொடர் ஒளிபரப்பாகும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

இதையும் படிக்க: சுந்தரி தொடர் நாயகிக்கு குழந்தை பிறந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT