அண்ணா தொடர் 
செய்திகள்

3 ஆண்டுகள் பயணம்... 876 எபிசோடுகளுடன் நிறைவடைந்த அண்ணா தொடர்!

அண்ணா தொடர் நிறைவடைந்தது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அண்ணா தொடர் 876 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.

அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிவந்த இத்தொடரில், செந்தில் குமார், நித்யா ராம், பூவிலங்கு மோகன், ரோசரி, சுபிக்‌ஷா, ஹேமா உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.

சூழ்நிலை காரணமாக தாய் சிறைக்குச் சென்ற பிறகு, தந்தையின் வளர்ப்பில் வளர்ந்த பிள்ளைகளை மையப்படுத்தி அண்ணா தொடர் எடுக்கப்பட்டு வந்தது.

மூத்த அண்ணனாக இருந்து, தங்கைகளை பராமரித்து வரும் அண்ணாவை(செந்தில் குமார்) பிரதானப்படுத்தி இந்தத் தொடர் ஒளிபரப்பப்பட்டு வந்தது.

ஏ. துர்கா சரவணன் இயக்க, ராஜம்மாள் கிரியேஷன்ஸ் தயாரித்து வந்த அண்ணா தொடர், டிஆர்பியிலும் முன்னணியில் இருந்து வந்தது.

கடந்த 3 ஆண்டுகளாக 2023 மே மாதம் ஒளிபரப்பாகி வந்த அண்ணா தொடர், பரபரப்பான திருப்பங்களுடன், விறுவிறுப்பான காட்சிகளுடன் தொடர்ந்து 4.30 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு 876 எபிசோடுகளுடன் நேற்று(ஜன. 18) நிறைவடைந்தது.

The serial 'Anna', which was being broadcast on Zee Tamil television, concluded with 876 episodes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரைசதம் விளாசிய கௌதமி; குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 179 ரன்கள் இலக்கு!

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலி!

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார்.. ‘மை லார்ட்’ பட டிரைலர்..!

சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு பெற வேண்டுமா? நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிவுறுத்தல்!

3வது காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 7% சரிந்த விப்ரோ!

SCROLL FOR NEXT