வைஷாலி தணிகா - சத்ய தேவ்  
செய்திகள்

கருவுற்று இருப்பதை அறிவித்த சின்ன திரை நடிகை!

மகிழ்ச்சி செய்தியை அறிவித்த நடிகை வைஷாலி தணிகா.

DIN

சின்ன திரை நடிகை வைஷாலி தணிகா தான் கருவுற்று இருப்பதாக அறிவித்துள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான கதகளி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வைஷாலி தணிகா. இதனைத் தொடர்ந்து இவர் காதல் கசக்குதையா, சர்கார், சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தொடர்ந்து ராஜா ராணி தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமான வைஷாலி தணிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ், நம்ம வீட்டு பொண்ணு உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

பின்னர், சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மகராசி தொடரில் நடித்தார். தொடர்ந்து, முத்தழகு தொடரில் எதிர்மறையான பாத்திரத்தில் தன்னுடைய அழுத்தமான நடிப்பை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, தனது கணவர் சத்ய தேவ் உடன் நடிகை வைஷாலி தணிகா மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்ன திரை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மனதைக் கவர்ந்தார். தற்போது, மகாநதி தொடரில் வெண்ணிலா பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், தனது கணவருக்கு கார் பரிசளித்த விடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது.

இந்த நிலையில், நடிகை வைஷாலி தணிகா தான் கருவுற்று இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், “விரைவில் குட்டி தேவதை எங்கள் வீட்டுக்கு வருவார். நாங்கள் மூவராகப் போகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வைஷாலி தணிகா - சத்ய தேவ் தம்பதிக்கு சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: கார்த்திகை தீபம் ஆர்த்திகாவின் புதிய தொடர்! ஜோடி யார் தெரியுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT