மணிமேகலை  இன்ஸ்டாகிராம்
செய்திகள்

மணிமேகலைக்கு சிறப்பு பரிசளித்த சிநேகா, வரலட்சுமி சரத்குமார்!

தொகுப்பாளர் மணிமேகலைக்கு பிறந்தநாளையொட்டி நடிகை சிநேகா, வரலட்சுமி சரத்குமார் சிறப்பு பரிசுகளை அளித்து வாழ்த்து..

DIN

சின்ன திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலைக்கு பிறந்தநாளையொட்டி நடிகை சிநேகா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் சிறப்பு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மற்ற எந்த ஆண்டுகளிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிய டான்ஸ் ஜோடி டான்ஸ் குழுவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

சின்ன திரை தொகுப்பாளர் மணிமேகலை இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். நகைச்சுவை கலந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்ட மணிமேகலை தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிறகு, வாழ்க்கையே தொலைந்துவிட்டது என பலர் விமர்சனங்களை எழுப்பிய நிலையில், ஜீ தமிழ் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் மணிமேகலை.

மணிமேகலை

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் மணிமேகலைக்கு நடிகை சிநேகா, பட்டுப் புடவையை பரிசளித்துள்ளார். இதேபோன்று நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்ணாடியை பரிசளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பரிசுகளுடன் மணிமேகலை

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மணிமேகலை, எனக்காக நேரம் ஒதுக்கி இப்பொருள்களை வாங்கி என் பிறந்தநாளை சிறப்புடையதாக்கியதற்கு மிக்க நன்றி எனப் பதிவிட்டுள்ளார். இதேபோன்று பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய டான்ஸ் ஜோடி டான்ஸ் குழுவுக்கும் மணிமேகலை நன்றியை பதிவு செய்துள்ளார்.

மணிமேகலைக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT