பிரியா பிரகாஷ் வாரியர் 
செய்திகள்

நடிப்புக்குத் தீனி போடும் கதைகளில் நடிக்கவே விருப்பம்: பிரியா பிரகாஷ் வாரியர்!

தன் எதிர்கால நடிப்புத் திட்டம் குறித்து பிரியா பிரகாஷ் வாரியர்...

DIN

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தன் நடிப்பு குறித்து பேசியுள்ளார்.

'ஒரு அடார் லவ்' படம் மூலம் இந்தியளவில் வைரலானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அதன்பின், சில படங்களில் நடித்தவருக்குப் பெரிய திருப்புமுனை என எதுவும் நிகழவில்லை.

ஆனால், அண்மையில் நடிகர் அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் அர்ஜூன் தாஸூடன் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. நடிகர் அஜித் மற்றும் அர்ஜூன் தாஸூடன் நடித்தது ’டபுள் தாமாக்கா’ என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருப்பவர் ரசிகர்களின் அன்பிற்கு நெகிழ்ச்சியாக நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

ஒரு நேர்காணலில் பேசிய பிரியா, “அடுத்தடுத்தும் இதேபோன்று வலுவான திறமையான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். நடிப்புக்குத் தீனி போடும் விதமாக 'குட் பேட் அக்லி' படத்தில் அவரது நித்யா கதாபாத்திரம் அமைந்தது. தொடர்ந்து, நான் நடிக்கும் திரைப்படங்களைக் கவனமுடன் தேர்ந்தெடுக்கப் போகிறேன்.

இயக்குநர் மணிரத்னம் படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆக்‌ஷன் கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும். சினிமாவில் அடுத்தடுத்து உயரங்கள் தொடுவதுதான் மகிழ்ச்சி. சமூக வலைதளங்களில் ஈடுபாடுடன் இருப்பதும் என்னுடைய துறையின் ஒரு பகுதிதான். எப்போதும் என் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் செய்யும் செயல்களில் முழு கவனமும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT