செய்திகள்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய வெளியீட்டுத் தேதி!

எல்ஐகே படத்தின் வெளியீட்டுத் தேதி...

DIN

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதற்கடுத்து, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அவரது 4-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு டூட் (dude) எனப் பெயரிட்டுள்ளனர். இப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.

அதேநேரம், நயன்தாரா தயாரிப்பில் உருவான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு படங்களும் ஒரேநேரத்தில் வெளியாவது குறித்து ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்ட நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்

SCROLL FOR NEXT