ஹார்ட் பீட் எக்ஸ்
செய்திகள்

ஹார்ட் பீட் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஹார்ட் பீட் - 2 வெப் தொடரின் வெளியீடு தொடர்பாக...

DIN

ஹார்ட் பீட் வெப் தொடரின் 2 ஆம் பாகத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம் உள்ளிட்டவற்றை மையக்கருவாக வைத்து இத்தொடரின் முதல் பாகம் எடுக்கப்பட்டு வந்தது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று விறுவிறுப்புடனும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் ஒளிபரப்பப்பட்ட ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொடரில் முதல் பாகத்தில் நடித்த நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா, பாடினி குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியானேஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் ஹார்ட் பீட் இணையத் தொடர் மே 22 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷாவ்மி பேட்டரிகளுக்கு 50% தள்ளுபடி! 4 நாள்கள் மட்டுமே...

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

SCROLL FOR NEXT