மெளனிகா, அனில் செளத்ரி, பாப்ரி கோஷ் இன்ஸ்டாகிராம்
செய்திகள்

விஜய் சேதுபதி படத்தின் பெயரில் புதிய சீரியல்!

மூன்று முடிச்சு, சிந்து பைரவி, ஈரமான ரோஜாவே, புது வசந்தம், ராஜா ராணி, மெளனம் பேசியதே வரிசையில் புதிய தொடர்.

DIN

நடிகர் விஜய் சேதுபதி படத்தின் பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

சின்ன திரையில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான தொடர்கள், திரைப்படங்களின் பெயர்களிலேயே ஒளிபரப்பாகின்றன.

ரசிகர்களின் மனதில் எளிமையாக தலைப்பை பதிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கதையையொட்டி மக்களைக் கவரும் வகையில் தலைப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவும் படங்களின் பெயரே தொடர்களுக்கும் வைக்கப்படுகிறது.

மூன்று முடிச்சு, சிந்து பைரவி, ஈரமான ரோஜாவே, புது வசந்தம், ராஜா ராணி, மெளனம் பேசியதே போன்றவை திரைப்படங்களின் பெயர்களின் ஒளிபரப்பான வெற்றிகரமான தொடர்கள்.

இந்த வரிசையில் , தற்போது விஜய் சேதுபதி சமீபத்தில் நடித்து வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தத் தொடரில் விளம்பரப் படங்களில் நடித்து புகழ் பெற்ற அனில் செளத்ரி நாயகனாக நடிக்கிறார். தலைப்புக்கு ஏற்ப இத்தொடரில் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.

பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து புகழ் பெற்ற பாப்ரி கோஷ் மற்றும் லப்பர் பந்து படத்தில் துணைப் பாத்திரத்தில் நடித்த மெளனிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா இத்தொடரை தயாரிக்கிறது. இளம் தலைமுறை ரசிகர்களைக் கவரும் வகையிலான தலைப்பில் இரு காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் இத்தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

பாப்ரி கோஷ், மெளனிகா என இருவருக்குமே தனி ரசிகர் பட்டாளம் உள்ளதாலும், சின்ன திரையில் இரு காதலை மையப்படுத்தி புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளதாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | வள்ளியின் வேலன் தொடர்: இறுதிநாள் படப்பிடிப்பில் காதல் ஜோடி உருக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT