ஹார்ட் பீட் வெப் தொடரின் 2 ஆம் பாகத்தின் முதல் 4 எபிசோடுகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த நிலையில் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், மருத்துவர்களுக்கிடையே நடக்கும் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை மையக்கருவாக வைத்து நகைச்சுவை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகம் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இக்கதையின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு இன்று முதல்(மே 22) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தத் தொடரில் முதல் பாகத்தில் நடித்த நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா, பாடினி குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியானேஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.
தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் 2 ஆம் பாகம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: இலங்கையில் மதராஸி படப்பிடிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.