செய்திகள்

கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள்... சிம்புவைப் பாராட்டிய கமல்!

நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிம்புவைப் பாராட்டியுள்ளார்....

DIN

தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிம்புவைப் பாராட்டியுள்ளார்.

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (மே. 24) சென்னையில் நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், மணிரத்னம், சிம்பு உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்தும் மேடையில் பாடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது.

நிகழ்வில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “நடிகர் சிலம்பரசன் போகப்போகும் தூரம் எனக்குத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தை வழிநடத்தும் தலைமை இருப்பதால் இன்னும் பொறுப்புகளுடன் சிலம்பரசன் நடந்துகொள்ள வேண்டும். இது சுமையல்ல. சுகம். அதை நீங்கள் (சிம்பு) அனுபவியுங்கள். அசோக் செல்வன் சொன்னாரே, என் விஸ்வரூபம் படம் வெளியாக போராடியவர் என. எனக்கே தெரியாமல் அப்படி பல ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன். முதல்வராக வரவில்லை.

ஒரு எம்எல்ஏ என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நாங்கள் 40 ஆண்டுகளாக தமிழகத்தில் மெல்ல மெல்ல செய்துகொண்டிருக்கிறோம். நாங்கள் தனிமனிதர்கள் அல்ல. என்னுடன் வளர்ந்த தம்பிகளெல்லாம் இன்று சமூகத்தில் பெரிய மனிதர்களாக நடந்துகொண்டிருப்பது பெருமையாக இருக்கிறது. உங்கள் தம்பிகளையும் நீங்கள் அப்படி நடக்க வைக்க வேண்டும் எஸ்டிஆர்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி கண்ணாடி டிரைலர்!

டென்னிஸ் ராக்கெட் உடைப்பு: மெத்வதேவுக்கு ரூ.37 லட்சம் அபராதம்!

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சூழல் - சுற்றுலாத் தலம் மூடல்!

மயில் கழுத்து... அனன்யா பாண்டே!

ராஜஸ்தானில் 55 வயதில் 17வது குழந்தை பெற்ற பெண்!

SCROLL FOR NEXT