பவன் கல்யாண் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
பவன் கல்யாண் நடித்துள்ள ஓஜி திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்துள்ள ஓஜி (தே கால் ஹிம் ஓஜி) திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட நடிகர் பவன் கல்யாண், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
அரசியலில் தீவிரம் காட்டி வந்ததால், நீண்ட நாள்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் பங்கேற்று படத்தை முடித்துக்கொடுத்தார்.
Advertisement
Advertisement
படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, செப். 25ஆம் தேதி ஓஜி திரைப்படம் வெளியாகவுள்ளது.
கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகிவரும் இப்படத்தில், பிரியங்கா மோகன், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சாஹோ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த சுஜீத் இயக்கியுள்ளார்.
ஓஜி படத்தில், ஓஜாஸ் கம்பீரா என்ற பாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பானது பவன் கல்யாணின் அரசியல் ஈடுபாட்டினால் ஒத்திவைக்கப்பட்டது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்ற நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனம் உறுதிசெய்துள்ளது.
இதற்கு முன்பு, ஹரி ஹர வீரமல்லு என்ற பவன் கல்யாணின் மற்றொரு புதிய படம் ஜுன் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | சிவகார்த்திகேயன் செய்த செயல்... பைரி நாயகன் நெகிழ்ச்சி!