ஹிமா பிந்து, சந்தோஷ், ஜீவிதா  இன்ஸ்டாகிராம்
செய்திகள்

ரஞ்சனி தொடரின் பிரபலங்கள் இணையும் புதிய சீரியல்!

நடிகை ஹிமா பிந்து மற்றும் ஜீவிதா ஆகியோர் இணைந்து புதிய தொடரில் நடிக்கவுள்ளனர்.

DIN

நடிகை ஹிமா பிந்து மற்றும் ஜீவிதா ஆகியோர் இணைந்து புதிய தொடரில் நடிக்கவுள்ளனர். இத்தொடருக்கு இரு மலர்கள் எனப் பெயரிடப்படுள்ளது.

இத்தொடரில் இவர்களுக்கு ஜோடியாக நடிகர் சந்தோஷ் நடிக்கவுள்ளார். இரு நாயகிகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படவுள்ளது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ரஞ்சனி தொடர் ஒளிபரப்பாகி வந்தது. மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் 152 நாள்களிலேயே நிறைவு பெற்றது.

மற்ற தொடர்களைப் போன்று கதைக்களத்தை நீட்டித்துக்கொண்டு செல்லாமல், 5 நண்பர்களின் ஒருவரை நாயகி திருமணம் செய்துகொள்வதாக, கதையின் சுவாரசியத்தன்மை இழந்துவிடாத வகையில் தொடர் ஒளிபரப்பானது.

ரஞ்சனி தொடரிலிருந்து...

5 ஆண் நண்பர்களுடனான பெண்ணின் நட்பை மையமாக வைத்து இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் திருப்பங்களுடன் ரஞ்சனி தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இத்தொடரில் நடிகை ஜீவிதா நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக சந்தோஷும் நடித்து வந்தனர்.

இந்தத் தொடரில் ஜீவிதாவுக்கும் சந்தோஷுக்கும் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து புதிய தொடரில் நடிக்கவுள்ளனர். இதனால் இவர்களின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இரு மலர்கள் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய தொடரில் சந்தோஷும் ஜீவிதாவும் நடிக்கவுள்ளனர். ஆனால், தலைப்புக்கு ஏற்ப ஜீவிதா மட்டுமின்றி மற்றொரு நாயகியும் இத்தொடரில் நடிக்கிறார். சன் தொலைக்காட்சியில் இலக்கியா தொடரில் நடித்த ஹிமா பிந்து இத்தொடரில் மற்றொரு நாயகியாக நடிக்கிறார்.

சன் தொலைக்காட்சியின் பிரபலங்கள் மீண்டும் இணைந்து ஒரே தொடரில் நடிக்கவுள்ளதால், ரசிகர்கள் பலர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | சொல்வதெல்லாம் உண்மைக்கு போட்டியாக மற்றொரு நிகழ்ச்சி!

இதையும் படிக்க | மகள்களின் புகைப்படங்களை வெளியிட்ட சினேகன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT