டொவினோ தாமஸ், உன்னி முகுந்தன் 
செய்திகள்

டொவினோ தாமஸைப் பாராட்டியதால் தன் மேலாளரைத் தாக்கிய உன்னி முகுந்தன்!

உன்னி முகுந்தன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...

DIN

நடிகர் உன்னி முகுந்தன் தன்னைத் தாக்கியதாக அவரின் மேலாளர் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் ரசிகர்களிடம் நல்ல அபிப்ராயத்தைப் பெற்றவர் உன்னி முகுந்தன். 'மாளிக்கப் புரம்' படத்தின் மூலம் பெரிதாகக் கவனம் ஈர்த்தவர் மார்கோ படத்தால் இந்தியளவில் பிரபலமானார்.

உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று உடலைப் பராமரிக்கும் நாயகனான உன்னி முகுந்தன் புகைப்பழக்கத்திற்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டொவினோ தாமஸின் நரிவேட்டை திரைப்படத்தை உன்னி முகுந்தனின் மேலாளர் விபின் குமார் இணையத்தில் பாராட்டி எழுதியுள்ளார்.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த உன்னி முகுந்தன் தன்னைக் கடுமையாகத் தாக்கியதாக மேலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய விபின் குமார், “நான் நடிகர் உன்னி முகுந்தனிடம் 6 ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றி வருகிறேன். மார்கோ திரைப்படத்துக்குப் பின் அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. அவரை வைத்து கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், அவர்களும் பின்வாங்கியதால் உன்னி கடுமையான விரக்தியில் இருந்தார். யார் சொல்வதையும் கேட்கும் நிலையிலும் இல்லை.

நான் 18 ஆண்டுகளாகத் திரைத்துறையில் திரைப்பட புரமோஷன் ஆலோசகராகவும் இருக்கிறேன். பல படங்களுக்கு மக்கள் தொடர்பு பணிகளையும் செய்திருக்கிறேன். அப்படி, புரமோஷனுக்காக டொவினோ தாமஸின் நரிவேட்டை படத்த்தைப் பாராட்டி முகநூலில் குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன். அதைப் படித்த உன்னி முகுந்தன், என்னை அழைத்து இனிமேல் நீ எனக்கு மேலாளராக இருக்க வேண்டாம் என்றார்.

மேலும், என்னை நேரில் அழைத்துத் தாக்கியதுடம் கடுமையான வார்த்தைகளைச் சொல்லித் திட்டினார். அதற்காகவே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து உன்னி முகுந்தன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

மலையாளத்தின் முன்னணி நடிகர் ஒருவர் தன் மேலாளரைத் தாக்கிய சம்பவம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT