முகப்பு
செய்திகள்

குபேரா இசை வெளியீட்டு விழா தேதி!

குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா...

செய்திகள்

குபேரா இசை வெளியீட்டு விழா தேதி!

குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா...

Updated On : 28 மே, 2025 at 11:45 AM
பகிர்:

நடிகர் தனுஷ் நடித்த குபேரா படத்தின் இசைவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா பிரதான பாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர்.

பான் இந்தியப் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்குக் குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

குபேரா திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகுகிறது. அண்மையில், ட்ரான்ஸ் ஆஃப் குபேரா (trance of kubera) எனப் பெயரிடப்பட்ட டீசர் விடியோ கவனம் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தயாரிப்பு நிறுவனம் விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →