செய்திகள்

சிம்பு சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மாரி செல்வராஜ்!

பைசன் குறித்து சிலம்பரசன் கருத்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சிம்பு பைசன் திரைப்படத்தைப் பாராட்டியது குறித்து மாரி செல்வராஜ் பேசியுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.

உலகளவில் ரூ. 65 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் தெலுங்கிலும் வெளியானது.

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமன்றி திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “பைசன் திரைப்படத்தைப் பார்த்த நடிகர் சிலம்பரசன் என்னிடம், ‘நாம் தொடர்ந்து வேலை செய்ய செய்ய நம்மை அறியாமலேயே அற்புதத்தை நிகழ்த்தக்கூடிய ஆளாக மாறிவிடுவோம். அதன்பின், நாம் என்ன செய்தாலும் அது அற்புதத்தை நோக்கித்தான் நகரும். பைசனில் அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது’ என்றார். அவர் அப்படிச் சொன்னது என்னை ஆச்சரியப்படுத்தியது” எனத் தெரிவித்துள்ளார்

actor silambarasan about bison movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

3வது டி20: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு!

மனம் பேசும் மொழி... மலர்!

காதலின் சாரல் மொழி... சத்யா தேவராஜன்!

SCROLL FOR NEXT