பிக் பாஸ் போட்டியாளர்கள் படம் - எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியில் நீடிக்கத் தகுதியற்ற நபர்கள் யார் என்பது குறித்த பட்டியல்.

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியில் நீடிக்கத் தகுதியற்ற நபர்கள் யார் என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, அப்சரா, கலையரசன் ஆகியோர் ஏற்கெனவே வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி அக். 5ஆம் தேதி பிரமாண்டமாகத் தொடங்கியது. 10 ஆண்கள், 10 பெண்கள் இப்போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில், முதல் வாரம் தாமாகவே முன்வந்து நந்தினி வெளியேறினார்.

முதல் வார இறுதியில் இயக்குநர் பிரவீன் காந்தியும், இரண்டாவது வார இறுதியில் திருநங்கை அப்சராவும், மூன்றாவது வார இறுதியில் ஆதிரையும், நான்காவது வார இறுதியில் கலையரசனும் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் வெளியேறினர்.

இதனால், 15 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நிலையில், 5வது வாரத் தொடக்கத்தில் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக திவ்யா கணேசன், ப்ரஜின், சான்ட்ரா, அமித் பார்கவ் ஆகியோர் நுழைந்துள்ளனர்.

இவர்கள் நுழைந்த மறுநாளே நாமினேஷன் நடைபெற்றது. இதில், பிக் பாஸ் போட்டியில் நீடிக்கத் தகுதியற்ற நபர்கள் இருவரை போட்டியாளர்கள் அனைவரும் தேர்வு செய்ய வேண்டும். அதிக நபர்களால் தேர்வு செய்யப்படும் நபர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறுவார்கள்.

விஜே பார்வதி, அரோரா

இப்பட்டியலில் உள்ளவர்களுக்கு மக்கள் இந்த வாரம் முழுக்க வாக்களிக்க வேண்டும். மக்களிடம் அதிக வாக்குகளைப் பெறுபவர் காப்பாற்றப்படுவார். குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர் வெளியேறுவார்.

அந்தவகையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில், வினோத், பிரவீன், கமருதீன், ரம்யா, எஃப்ஜே, சபரி, வியானா, கெமி, விக்ரம், பார்வதி, துஷார், திவாகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு மக்கள் இந்த வாரம் முழுக்க வாக்களிப்பார்கள். இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர் வெளியேற்றப்படுவார்.

இதையும் படிக்க | மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமருதீன்

Bigg boss 9 tamil 5th week Nomination list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவாரின் மரணம் வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி இரங்கல்!

விமான விபத்தில் அஜீத் பவார் பலி! சம்பவ இடத்தின் காட்சிகள்!

நீதிக் கதைகள்! தர்மம் தலை காக்கும்!

அஜீத் பவாரின் நிறைவேறாத முதல்வர் கனவு! மகுடம் சூடாத மக்களின் மன்னர்!

மகாராஷ்டிரத்தில் 3 நாள்கள் துக்கம் அனுசரிப்பு! பாராமதி விரையும் முதல்வர்!

SCROLL FOR NEXT