பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறையின் விடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை இருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதனுள் போட்டியாளர்கள் புகைபிடிக்கும் விடியோ இதுவரை வெளியானதில்லை.
புகைபிடிக்கும் அறையின் விடியோவை வெளியிட வேண்டும் என பல்வேறு சீசன்களாக ரசிகர்கள் கோரிக்கைவைத்து வந்தாலும் அதன் விடியோ இதுவரை வெளியானதில்லை. வெறும் திரை மட்டுமே பிக் பாஸ் நேரலையில் காட்டப்படும்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் புகைபிடிக்கும் அறையின் விடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரசிகர்கள் பலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகர் நிரூப் நந்தகுமார் உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இந்த சீசனின் புகைபிடிக்கும் அறையின் விடியோதான் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் போட்டியாளர் நிரூப் தனது சக போட்டியாளர்களுடன் பிக் பாஸ் வீட்டின் ஒரு பகுதியைச் சேர்ந்த அறையில் புகைபிடித்துக்கொண்டிருக்கிறார். புகைபிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது எனக் குறிப்பிட்டு இந்த விடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 106 நாள்கள் நிரூப் நந்தகுமார் இருந்தார். எனினும் இவர் வெற்றி பெறவில்லை. பட்டியலில் 5வது இடத்தை மட்டுமே பிடித்தார்.
இதையும் படிக்க | விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.