ஏகே - 64 படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது முழுநேரமாக கார் பந்தயத்திற்கான பயிற்சிகளிலும் போட்டிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரின் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.
இதற்கான முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஏகே - 64 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ராகவா லாரன்ஸிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறதாம்.
இருவரிடமும் ஆதிக் ரவிச்சந்திரன் கதை மற்றும் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளாராம்.
இதையும் படிக்க: இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.