பிரபாஸ்  
செய்திகள்

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

ராஜா சாப் படக்குழு அறிக்கை...

இணையதளச் செய்திப் பிரிவு

பிரபாஸ் நடித்த ராஜா சாப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்தார்.

சலார் படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதேபோல், கல்கி ஏடி 2989 ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது.

தற்போது, ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார்.

ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக உருவான இப்படம் அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் பரவி வந்தது. இதனை மறுத்து, ராஜா சாப் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “நடிகர் பிரபாஸின் பிரம்மாண்ட படமான தி ராஜா சாப் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிச்செல்கிறது என வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

இப்படம் திட்டமிட்டபடி ஜன. 9, 2026 அன்று வெளியாகும். ரசிகர்களுக்கு விருந்தாக அமைய வேண்டும் என அனைத்து துறையினரும் கடுமையான உழைப்பைச் செலுத்தி வருகின்றனர். அதனால், வதந்திகளை நம்பாதீர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

the raja saab movie will release as per announcement date

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT