நடிகர் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படத்தின் ‘அடியே அலையே’ எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், வரும் 2026 ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது.
நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், பராசக்தி திரைப்படத்தின் “அடியே அலையே” இன்று (நவ. 6) எனும் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. எகாதேசி எழுதியுள்ள இப்பாடலை, பாடகர் ஷான் ரோல்டன் மற்றும் பாடகி தீ ஆகியோர் பாடியுள்ளனர்.
கடந்த 1960-களில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற மொழிப் போர் போராட்டங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.