நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த யூடியூபரின் கேள்விக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதெர்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷனிடம் அவரது உடல் எடை குறித்து யூடியூபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், கௌரி கிஷனின் ஆணித்தரமான பதிலுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அதெர்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் உடல் எடை குறித்த கேள்விக்கு, கௌரி கிஷன் ``என் உடல் எடையைத் தெரிந்து என்ன செய்யப்போகிறீர்கள்? ஒருவரை உடல்ரீதியாக அவமானப்படுத்துவது எல்லாம் கேள்வியா? நான் நடித்திருக்கும் திரைப்படம் குறித்து கேளுங்கள்’’ என்று பதிலளித்தார்.
இதனையடுத்து, ``தமிழ் சினிமாவில் இப்படித்தான் கேள்விகள் இருக்கும். உங்களிடம் மோடியைப் பற்றியா கேட்க முடியும்? நடிகைகள் குஷ்பு, சரிதா என எல்லாரும் இக்கேள்வியை எதிர்கொண்டவர்கள்தான்’’ என்று யூடியூபர் கூறினார்.
யூடியூபரின் கேள்வியால் ஆத்திரமான கௌரி கிஷன் ``ஒரு நடிகையின் உடல் எடையைத் தெரிந்துகொள்வது அநாகரீகமானதுதான். இது கேள்வியும் இல்லை; நீங்க பத்திரிகையாளரும் இல்லை. உங்கள் துறைக்கு அவமானத்தைத்தான் கொடுக்கிறீர்கள்’’ என்று தெரிவித்தார்.
யூடியூபரின் கேள்விக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நடிகை கௌரி கிஷன் நன்றியும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: வரவேற்பைப் பெறும் யாமி கௌதமின் முத்தலாக் பற்றிய திரைப்படம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.