கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் தம்பதி Photo : Instagram / Katrina Kaif
செய்திகள்

கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் தம்பதிக்கு ஆண் குழந்தை!

கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷால் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பாலிவுட் தம்பதி கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நட்சத்திர ஜோடிகளான கத்ரீனா கைஃப் - விக்கி கெளஷல் ஆகியோர் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்த கத்ரீனா கைஃப், கடைசியாக ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்த இப்படம் கடந்தாண்டு ஜனவரி மாதம் வெளியானது.

கடந்த செப்டம்பர் மாதம், எங்கள் வாழ்க்கையில் மிகச் சிறந்த சகாப்தத்தை தொடங்க ஆயத்தமாகியுள்ளோம் என்று தாய்மைப்பேறு அடைந்த செய்தியை சமூக வலைதளங்களில் கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் ஜோடி பகிர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று (நவ. 7) ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷால் ஜோடி மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

Katrina Kaif and Vicky Kaushal welcome baby boy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு! ஆனால்...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

SCROLL FOR NEXT